வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
ADDED :1 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர் கோயில் வைகாசி விசாக விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
இக்கோயிலில் மே 20 முதல் 30 வரை வைகாசி விசாக விழா நடக்கிறது. நேற்று காலையில் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி விரதம் துவக்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. வைகாசி விசாகத்தன்று( மே 30) காலையில் மூலவருக்கு பாலபிேஷகம், மாலை பூ வளர்ப்பும், இரவு 9:00மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கு நிகழ்ச்சி நடக்கிறது.