உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா: அம்மன் திருவீதி உலா

காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா: அம்மன் திருவீதி உலா

அன்னுார்: அல்லிக்காரம்பாளையம், காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், நேற்று சுவாமி திருவீதி உலா நடந்தது.


அல்லிக்காரம்பாளையம், காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த 18ம் தேதி பூச்சாட்டு திருவிழா துவங்கியது. பொறி மாற்றுதலும், கம்பம் நடுதலும் நடந்தது. கடந்த 19ம் தேதி இரவு படைக்கலம் எடுத்தலும், அம்மனை அழைத்து வருதலும் நடந்தது. 20ம் தேதி காலை பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில், பொங்கல் வைக்கப்பட்டது. மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முக்கிய வீதிகள் வழியாக தேர்த் திருவிழா நடந்தது. நேற்று 21ம் தேதி காலை, மஞ்சள் நீர் உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும், நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, (22ம் தேதி) காலை 10:00 மணிக்கு, மறுபூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !