உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் வராகி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை

உத்தரகோசமங்கையில் வராகி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னோர்கள் சாபம் நீங்கவும், பல்வேறு சிறப்புகளை பெற்ற ஸ்தலமாக வராகி அம்மன் கோயில் விளங்குகிறது. இங்கு வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாவராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள ஏராளமான அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்தினர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !