பெரியகுளம் காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா
ADDED :6 hours ago
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து, சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது.பக்தர்கள் அக்னிசட்டி, முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மே 26ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தெற்கு புதுத்தெரு மறவர் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.