உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தா பிரீத்தி மகோத்சவம்; 1008 நெய் அப்ப அபிஷேகம்

கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் சாஸ்தா பிரீத்தி மகோத்சவம்; 1008 நெய் அப்ப அபிஷேகம்

கோவை ; ஸ்ரீ மகா சத்குரு சேவா சங்கம் சார்பில் 18-ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி மகோத்சவம் கோவை ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் மூன்று நாள் நிகழ்வாக நடைபெறுகிறது முதல் நாளான இன்று குரு வந்தனம் அதை தொடர்ந்து கணபதி ஹோமம், அவ ஹந்தி ஹோமம் 1008 நெய் அப்பம் அபிஷேகம், 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுவாமி ஐயப்பன் பூர்ண புஷ்கலா சமேதராக நெய் அப்பத்திற்கு நடுவே பக்தர்களுக்கு காட்சியளித்தார். 


தொடர்ந்து பூர்ண புஷ்கலாம்பாள் சமேத சுவாமி ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர் நிகழ்வாக ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின் கச்சேரி நடந்தது. நிறைவாக மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மதியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் நிகழ்வாக சனிக்கிழமை அன்று காலை கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து உபநிஷத் பாராயணம், ருத்ராபிஷேகம், கோ பூஜை கன்யா பூஜை, தம்பதி பூஜை ஆகியன நடைபெறும். தொடர்ந்து மாலை சுவாமி ஐயப்பனின் திரு உருவப் படத்தை யானை மேல் வைத்து திருவீதி உலா நடைபெறுகிறது. மூன்றாம் நாள் நிறைவு  நிகழ்வாக கோவையில் சபரிமலை என்ற நிகழ்ச்சியை கேரள மாநிலம் சபரிமலையை சேர்ந்த தந்திரி ஸ்ரீ மகேஷ் மோகனரு நடத்தி வைக்கிறார். விழாவில் காலை 05.30 மணிக்கு கணபதி ஹோமம், 6-30 மணிக்கு உஷ பூஜை, அஷ்டபிஷேகம், உச்சிக கால பூஜை நிறைவாக 12.45 மணியளவில் தீபாராதையுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. விழாவில் பிரபல பாடகர் வீரமணிதாசன் குழுவினரின் இன்னிசை கச்சேரியுடன் நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடைதிறப்பு தீபாராதனை புஷ்பாபிஷேகம் மாலை 7 மணிக்கு திருவாபரணம் சாத்துதல் படி பூஜை இரவு 8.30 மணிக்கு அத்தாழ  பூஜை ஹரிவராசனம் மகா மங்கள ஆர்த்தி மகா தீபாரதனையுடன் நடை சாத்துதல் நடைபெற உள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !