உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா: அம்மன் வீதி உலா

மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா: அம்மன் வீதி உலா

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 6ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு பரம்பரை பட்டறைக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பூப்பல்லக்கில் வானவேடிக்கையுடன் கோயிலில் இருந்து நள்ளிரவு 1:00 மணிக்கு புறப்பட்டு முக்கிய வீதிகளில் உலா வந்தார். அம்மன் வரும் வழியில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அபிஷேகம் ஆராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !