உத்தரகாண்ட் மத்திய மகேஷ்வர் கோவில் திறப்பு; பக்தர்கள் தரிசனம்
ADDED :1 days ago
உத்தரகாண்ட்: பெரிதும் போற்றப்படும் பஞ்ச கேதார் ஆலயங்களில் ஒன்றான மத்தியமகேஷ்வர் திருக்கோயிலின் நடை, பாரம்பரியச் சடங்குகள் மற்றும் வேத மந்திர முழக்கங்களுக்கு இடையே பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. இதில் உத்தரகாண்ட் முதலமைச்சர் மற்றும் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வின்போது உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவுத; நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக ஆற்றல் நிறைந்த தேவபூமியில் நடைபெறும் இந்தத் தெய்வீகத் யாத்திரைக்கு, அனைத்து பக்தர்களும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். சார் தாம் மற்றும் பஞ்ச கேதார் யாத்திரைக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தரின் வசதி, பாதுகாப்பு மற்றும் தடையற்ற பயண அனுபவம் ஆகியவற்றை உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.