திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் கோ பூஜை
ADDED :12 hours ago
திட்டக்குடி; திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கோ பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 8:30 மணியளவில் மூலவர் வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கு கோ பூஜை, 7:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.