மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :12 hours ago
மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைய பெற்றதுமான கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் முன்பு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் பெருமாள் தாயாருடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், சேக்ஷ வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது.