கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :146 days ago
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் ஏராளமானோ ர் கலந்து கொண்டனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. புதுச்சேரி டாக்டர் சங்கரதேவி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை ராஜகோபுரம் திருப்பணி உபயதாரர்கள் செய்திருந்தனர்.