உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் கருடசேவை விமரிசை

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் கருடசேவை விமரிசை

மறைமலைநகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் கருடசேவை விமரிசையாக நேற்று நடந்தது. சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21ம் தேதி வைகாசி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் புண்யகோடி விமானத்திலும், இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் உற்சவர் பிரகலாதவரதர் 4 மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை கருடசேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் உற்சவர் பிரகலாதவரதர் எழுந்தருளி கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் நான்கு மாட வீதிகளில் புறப்பாடு வாண வேடிக்கையுடன் நடத்தப்பட்டது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !