உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் பூச்சாட்டு பெருந்திருவிழா

பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் பூச்சாட்டு பெருந்திருவிழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம் பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் பூச்சாட்டு பெருந்திருவிழா துவங்கியது.


கடந்த, 19ம் தேதி பூச்சாட்டு விழா நடந்தது. தொடர்ந்து, சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து பூ கம்பம் அழைத்து வந்து, பட்டத்தரசி அம்மன் கோயில் முன்பு, பூ கம்பம் நடும் நிகழ்ச்சி, 26ம் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 27ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை தினமும் மாலை, 7:00 மணி முதல் பட்டத்தரசி அம்மன் கோயில் முன்பு கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 1ம் தேதி இரவு, 12:00 மணிக்கு முனியப்பன் பூஜை மற்றும் கிடாய் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் தேதி மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொன்னியம்மாள், உருவாரங்கள், நகை, ஜலம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி அதிகாலை பட்டத்தரசி அம்மனுக்கு திருக்கல்யாணம், 7:00 மணிக்கு மாரியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகங்கள் அழைத்து வருதல், 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை,4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. 4ம் தேதி மஞ்சள் நீராட்டு, பட்டத்தரசி அம்மனுக்கு திருவீதி ஊர்வலம், 5ம் தேதி மறு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !