உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவர் கோவிலில் இன்று கொடியேற்றம்

ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவர் கோவிலில் இன்று கொடியேற்றம்

திருப்பூர்: திருப்பூர் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, செல்லாண்டியம்மனிடம் உத்தரவு பெறும் நிகழ்ச்சியுடன், கிராமசாந்தியும் நேற்று நடைபெற்றது. இன்று மாலை, கொடியேற்றம்  நடைபெற உள்ளது.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, விமரிசையாக நடத்தப்படுகிறது. நேற்று திருப்பூரின் காவல் தெய்வம், ஸ்ரீசெல்லாண்டியம்மனிடம் உத்தரவு பெற்று, கிராம சாந்தியுடன் தேர்த்திருவிழா துவங்கியது. அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி,  தேர்வீதியை வலம் வந்த செல்லாண்டியம்மனை பக்தர்கள் வழிபட்டனர். அம்மன் திருவீதியுலாவை தொடர்ந்து, கிராமசாந்தி பூஜைகள் நடந்தன.

இன்று மாலை, விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில், தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், இன்று மாலை துவங்கி, தொடர்ச்சியாக தினமும் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. அதற்காக, யாகசாலை புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வேஸ் சுவாமி கோவில் யாகசாலையில், தினமும் காலை மற்றும் மாலை என, இரண்டு வேளையும், ஹோமங்கள் நடக்கும். மொத்தம், 48 கலசங்களின் சுவாமிகளை எழுந்தருள செய்து, 23 கால யாகவேள்வி பூஜைகள் தொடர்ந்து நடக்கும்.

வரும், 30ம் தேதி விஸ்வேஸ்வரர் தேரோட்டமும், 31ம் தேதி  வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்க உள்ளது. பெருமாள் கோவில் மேடையில், இன்று துவங்கி, 4ம் தேதி வரை தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !