உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலத்தில் குருப் பெயர்ச்சி விழா: யாகசாலை பூஜைகள் துவங்கின

பட்டமங்கலத்தில் குருப் பெயர்ச்சி விழா: யாகசாலை பூஜைகள் துவங்கின

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி எழுந்தருள்கிறார். நாளை காலை 11:03 மணிக்கு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. பின்னர் யாகசாலையில் பூர்ணாகுதி தீபராதனை ஆகி, யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர்,உற்ஸவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவருக்கும்,உற்ஸவருக்கும் அலங்கார தீபராதனை நடந்தது. நாளை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பெயர்ச்சியாகும் நேரத்தின் விமான,கோபுரங்களுக்கு சிறப்பு தீபராதனை நடைபெறும். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !