உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூரிலிருந்து மேலூருக்கு எழுந்தருளிய திருமறைநாதர்; வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

திருவாதவூரிலிருந்து மேலூருக்கு எழுந்தருளிய திருமறைநாதர்; வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

மேலூர்; திருவாதவூரிலிருந்து மேலூருக்கு பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர் வேதநாயகி அம்பாளுக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் மண்டகப்படி அமைத்து வரவேற்றனர்.

திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழா மே 20 வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மே 21 கொடியேற்றப்பட்டது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 25 திருவாதவூரிலிருந்து பஞ்ச மூர்த்திகளுடன் பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலூருக்கு எழுந்தருளினார்.மேலூர் நுழைவாயிலில் தாசில்தார் முத்துப்பாண்டிக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. நாள் முழுவதும் மேலூரில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்த திருமறைநாதர் சிவன் கோயிலில் இருந்து மே 26 திருவாதவூருக்கு புறப்பட்டார்.மே 28 திருக்கல்யாணமும், மே 29 தேரோட்டமும், மே 30 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ் ,உதவி ஆணையர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, பேஸ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !