உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் திருமஞ்சனம்

வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் திருமஞ்சனம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருத்தேர் பெருந்திருவிழாவையொட்டி அம்மனுக்கு திருமஞ்சனம் நடந்தது.

கடந்த, 8ம் தேதி விநாயகர் சாட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, பூச்சாட்டுதல், பேரொளி வழிபாடு, சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக பூஜை, நாயக்கனூரில் இருந்து பூ கம்பம் திருக்கோயில் வந்தடைதல், அனிக்கூடை பூஜை, அம்மனுக்கு ஆபரணம் எடுத்து வருதல், பூக்கம்பம் நடுதல், மூலமூர்த்தி பரிவார மூர்த்தி களுக்கு திருகாப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று பூவோடு எடுத்தல், அபிஷேக பூஜை அலங்கார பூஜை, இரவு கம்பம் சுற்றி ஆடுதல், நள்ளிரவு அம்மன் குதிரை வாகனத்தில் தீர்த்த கிணறுக்கு எழுந்தருளல், அதிகாலை, 2:00 மணிக்கு சக்தி கரகம் தீர்த்த கிணற்றிலிருந்து புறப்படுதல் நடக்கிறது. 27ம் தேதி சக்தி கரகம் திருக்கோயில் வந்தடைதல், அம்மன் அழைப்பு, பொங்கல், மாவிளக்கு, அக்னி கும்பம், அலகு குத்தி தேர் இழுத்தல், பூ கம்பம் அகற்றி கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 28ம் தேதி சக்தி கரகம் கங்கையில் விடுதல், மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. 29ம் தேதி மறு பூஜை, வசந்த விழாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !