திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா
ADDED :1 days ago
திருவொற்றியூர்: கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், பிரம்மோத்சவ விழா இன்று துவங்குகிறது.
திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில், சின்ன காஞ்சிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி மாதம், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோத்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அந்தவகையில் நடப்பாண்டு விழா இன்று, செல்வர் உற்சவத்துடன் துவங்குகிறது. நாளை, அங்குரார்ப்பணம், சேனை முதலியார் உத்சவம் நடக்கிறது. 28ம் தேதி காலை 7:30 மணியளவில், கொடியேற்றமும், மாலையில், உற்சவர் பவள வண்ண பெருமாள், சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருள்வார். விழாவின் பிரதான நிகழ்வான, கருட சேவை, 30ம் தேதியும், திருத்தேர் உத்சவம், ஜூன் 3ம் தேதியும் நடக்க உள்ளன.