உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரத்தில் யானை வாகனத்தில் பெருமாள் உலா

எமனேஸ்வரத்தில் யானை வாகனத்தில் பெருமாள் உலா

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் யானை வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார். பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 224 வது பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. நேற்று காலை கீதா உபதேச திருப்பல்லக்கில் சேவை சாதித்தார். தொடர்ந்து மாலை வரதராஜ பெருமாள் யானை வாகனத்தில் அலங்காரமாகி வீதி உலா வந்தார். இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !