உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி மஹாயாகம்

மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி மஹாயாகம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்  சக்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி மஹாயாகம் விமர்சியாக நடைபெற்றது.

 தக்க்ஷிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு காலை 10 மணிக்கு சிவாச்சாரிகள் வேத மந்திரம் முழங்க மகாயாகம் நடத்தினர் .  அதனைத் தொடர்ந்து பால், தயிர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் ,விபூதி ,தேன் ,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மஹா யாகத்தில் ஸ்ரீ குருபகவான் மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை தொடர்ந்து மிதுனம், கன்னி, விருச்சகம், மகரம், மீனம் உள்ளிட்ட இராசிக்காரர்கள்  கலந்து கொண்டு பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு கும்பம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் இலட்சார்ச்சனை செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !