உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் குருபெயர்ச்சி விழா

பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் குருபெயர்ச்சி விழா

புதுச்சத்திரம்:  பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான், இன்று காலை 11.02 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதையொட்டி புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், சிறப்பு யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனை நடந்தது. 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் பரிகார ராசியினர் பங்கேற்று, பரிகாரம் செய்துகொண்டனர். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !