உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் 34 ஆண்டுகளுக்கு பின் வெள்ளித் தேரில் சுவாமி உலா

நெல்லையப்பர் கோயிலில் 34 ஆண்டுகளுக்கு பின் வெள்ளித் தேரில் சுவாமி உலா

 திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்த வெள்ளித்தேர் 1990களில் தீக்கிரையானது. அதன் பின்னர் செப்புத் தேரில் மட்டுமே வீதி உலா நடந்தது.  கடந்த ஆண்டு புதிய வெள்ளித் தேர் தயாரிக்கப்பட்டு கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு மீண்டும் வெள்ளித் தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். நேற்றிரவு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் “நமச்சிவாய” கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளிலும் வெள்ளித் தேர் வீதி உலா வந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !