கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு உற்சவம்
ADDED :21 hours ago
புதுச்சேரி: கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு உற்சவம் நேற்று நடந்தது.
புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, புன்யாஹவாசனம், ஹோமம், பூர்ணாஹூதி, மகா அபிேஷகம், கலச புறப்பாடு, அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.