பழநி கோயில்களில் குரு பெயர்ச்சி; குரு, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
ADDED :21 hours ago
பழநி; பழநி கோயில்களில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழநி கோயில்களில் குரு மே 26, காலை 11:00 மணியளவில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமலை நாயகி அம்மன் கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.