உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சாரம் சுப்ரமணியசுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா; பரிகார ஹோமம்

 சாரம் சுப்ரமணியசுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா; பரிகார ஹோமம்

 புதுச்சேரி: சாரம் சுப்ரமணியசுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நேற்று காலை 11:08 மணிக்கு இடபெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, சாரம் முத்தவிநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் உள்ள குருபகவான் சன்னதியில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.

காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம். 10 மணிக்கு மகா அபி ேஷகம், 10.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனை, கலசம் புறப்பாடு, 11 மணிக்கு கலசாபி ேஷகம், அலங்காரம் மகா தீபராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்திருந்தார்.

நெட்டப்பாக்கம் மடுகரை மரகதாம்பிகை உடனுறை மரக்காளீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, அன்று காலை 6:00 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், ராசி பரிகார ஹோமங்கள் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அதேபோல் பண்டசோழநல்லுார், ராமலிங்கேஸ்வர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !