உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

நத்தம்; நத்தம் அருகே பாப்பாபட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கடந்த மே.19 கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. பின்னர் நேற்று இரவு அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்தல், அக்னிசட்டி,பால்குடம், கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !