அத்திபட்டி பெத்தனாட்சி கோயிலில் வைகாசி மகோற்ஸவம்
பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டி பெத்தனாட்சி பெரியாண்டவர் கோயிலில் வைகாசி குலதெய்வ வழிபாடு மகோற்ஸவம் நடந்தது.
இவ்விழா மே 17ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. மே 23 காலையில் பால்குடம் எடுத்தல், பெத்தனாட்சி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பொங்கல்விழா நடந்தது. பின்னர் பெண்களுக்கு கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டி, அக்னிசட்டி எடுத்தல் நடந்தது.
மாலையில் மாவிளக்குடன் அம்மன் காமதேனு வாகனத்தில் நகர்வலம் வந்தார். இரவில் விளக்குப்பூஜை நடந்தது. மே 24 காலையில் முளைப்பாரியுடன் அம்மன் சிம்மாசனத்தில் நகர்வலம் வந்தார். அன்னதானம் நடந்தது. மதியம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை நாடார்கள் டிரஸ்ட் தலைவர் ராமர்பாண்டியன், செயலாளர்கள் சுதந்திரசேகரன், சரவணன், ராமையா நாடார் மெட்ரிக் பள்ளிச் செயலாளர் மாரியப்பன், உபதலைவர் சுந்தரமூர்த்தி, ராஜ சேகரன் செய்திருந்தனர்.