உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானத்திடம் ஆசி பெற்ற நேபாள ஜனாதிபதி

சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானத்திடம் ஆசி பெற்ற நேபாள ஜனாதிபதி

காத்மாண்டு: நேபாளத்தில் விஜயயாத்திரை செய்து வரும் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிகள் நேற்று நேபாளத்தின் சந்திரகிரியில் உள்ள பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயிலுக்கு வருகை புரிந்தார். சுவாமிக்கு பூர்ணகும்ப சிறப்பு வரவேற்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஜகத்குரு லோக கல்யாணத்திற்காக பகவான் மஹாதேவரை வழிபட்டார். அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழ்ங்கினார்.

ராஷ்டிரபதி பவனில் சுவாமிகள்; நேபாளத்தில் தங்கி இருக்கும் நாட்களில், பல்வேறு கோவில்களுக்கும் சந்நிதானம் விஜயம் செய்கிறார். இந்நிலையில் நேபாளத்தின் ஜனாதிபதி ராமச்சந்திர பௌடல் அவர்களின் அழைப்பை ஏற்று, ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவன் (குடியரசுத் தலைவர் மாளிகை) வளாகத்திற்கு வருகை புரிந்தார். ஜகத்குருவை மிகுந்த பக்தியுடன் வரவேற்ற குடியரசுத் தலைவர், தனது மனைவி சவிதா பௌடல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்களுடன் இணைந்து ஜகத்குருவின் தரிசனம் மற்றும் ஆசியை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !