திருப்பரங்குன்றத்தில் இன்று நிலைத்தெப்பம்!
ADDED :4675 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று(ஜன.,21) தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், தேரோட்டமும்நடந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், முதல்முறையாக இன்று நிலைத்தெப்பத் திருவிழா நடக்கிறது.திருப்பரங்குன்றம்சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன.,13ல் தொடங்கிய தெப்பத் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் தெப்பக்குளத்தில் எழுந்தருளினர். பின், தெப்பக்குளத்தில் தெப்பத்தை முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.தப்பக்குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால், வேறுவழியின்றி, "நிலைத்தெப்பம் அமைக்கப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன், சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடைபெறும்.