கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா
ADDED :12 hours ago
விழுப்புரம்: கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது.
விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் 2:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டும், தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் பிறகு, மாலை 5:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, அர்ச்சனையும், மகா தீபாரதனையும் நடந்தது.