திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :57 minutes ago
மேலூர்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. அதற்கு முன்பாக திருமறைநாதர் பிரியா விடை மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிறகு மஞ்சள் குங்குமத்துடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடந்தது. இவ்விழாவில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர். நாளை (மே 29) தேரோட்டமும், மே 30 கொடி யிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.