நெல்லிக்குப்பம் யோக நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :130 days ago
நெல்லிக்குப்பம்: யோக நரசிம்மருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம், பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு இன்று சுவாதி நட்சத்திரத்தையொட்டி, யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. இதில், யோக நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.