உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் அறம்சவாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

விழுப்புரம் அறம்சவாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

 விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஏ.கே.குச்சிப்பாளையம் அறம்சவாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


ஏ.கே.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலவிநாயகர், நாக சுப்ரமணியர், சிவலிங்கம், அறம்சவாராஹி அம்மன், காசி முனீஸ்வரர், கிளிமுக நாராயணர், லட்சுமி அம்மன், சிவமார்கண்டேயர், குபேரன், ஆஞ்சநேயர், கருடபகவான் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.  விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்துசாந்தியும் நடந்தது. பின், 108 மூலிகை உள்ளிட்ட ஹோமங்கள், சுவாமி சிலைகள் பிரதிஷ்டை, முதல்கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு தொடங்கி பாலவிநாயகர், அறம்சவாராஹி உள்ளிட்ட சன்னதிகளில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !