பேச்சியம்மன் கோவிலில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED :128 days ago
திருப்பூர்; திருப்பூர், மணியகாரம்பாளையம் நொய்யல் கரையில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாமாண்டு விழா இன்று நடந்தது. அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. முன்னதாக சிறப்பு யாக பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.