பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர ஹோமம்
விழுப்புரம்; பூவரசன்குப்பம். லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்மர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் அமிர்தவள்ளி நாயிகா சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி சுவாதி நட்சத்திர பூஜைகள் நடைபெற்றது. இதையாட்டி, காலை 6.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 9.00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் தங்க கவசம் சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்ததோடு, மகா தீபாராதனை நடைபெற்றது.பின், 9.30க்கு நரசிம்மர் சுதர்சன மகா ஹோமம் துவங்கியது. இதில், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியோடு வரதராஜ பெருமாள் யாகசாலையில் எழுந்தருளினார். தொடர்ந்த, வசுத்தார ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடு, உற்சவர், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.