தேய்பிறை சஷ்டி; கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :16 hours ago
விருத்தாசலம்; தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விருத்தாசலம், மணவாளநல்லுார் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் தேய்பிறை சஷ்டியொட்டி காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், வேடப்பர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.