கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கஜ கவுரி விரத பூஜை
ADDED :2 hours ago
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை இரண்டாவது கிராஸ் பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, சுமங்கலி பெண் பக்தர்களின், கஜ கவுரி விரத பூஜை நடந்தது. பார்வதி தேவி சிலைக்கு மலர் சூடி, யானை சிலை மீது அமர செய்து, எட்டு விதமான சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்தனர். சகல ஐஸ்வரியமும் வேண்டி, இந்த பூஜை செய்யப்பட்டது. தேங்காய், பழங்கள், பூக்கள், இ னிப்பு பலகாரங்கள், பல்வேறு பிரசாதங்களை வைத்து பெண் பக்தர் கள் பூஜித்தனர். மகா மங்களாரத்தி பூஜை நடந்தது. பக்தர்களுக் கு பிரசாதம் வழங் கப்பட்டது.