திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தை கிருத்திகை விழா
ADDED :4750 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று தை கிருத்திகை விழா, கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கந்தனை வழிபட்டனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விசேஷமாக கொண்டாடப்படும் கிருத்திகை விழாக்களில், தை கிருத்திகை முக்கியமானது. நேற்று வழக்கம்போல், தை கிருத்திகை கொண்டாடப்பட்டது. பிரார்த்தனையாக, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து, சரவணப் பொய்கையில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று கந்தனை வழிபட்டனர். காவடிகள் ஊர்வலமும் நடந்தது.