உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன்குன்று கோவிலில் வைகாசி விசாக விழா

குமரன்குன்று கோவிலில் வைகாசி விசாக விழா

அன்னூர்; குமரன்குன்று கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடந்தது.


குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து குமரன் குன்று கோவிலில் கிரிவலம் வந்தனர். கல்யாண சுப்பிரமணியசாமிக்கு அலங்கார பூஜை நடந்தது. ஓரைக்கால் பாளையத்திலிருந்து காவடிகளுடன் பாதயாத்திரை ஆக வந்த 120 பக்தர்கள் கோவில் வளாகத்தில் காவடிகளை சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்தில், ஓரைக்கால் பாளையம் ஸ்ரீ கிருஷ்ண லீலா குழுவின் பஜனை நடந்தது. முருகப்பெருமான் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !