திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நம்மாழ்வார் ஜென்ம தின விழா
ADDED :5 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் ஜென்ம தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெருமாள் கோயில் தனி சன்னதியாக நம்மாழ்வார் சன்னதி உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. உள்வீதி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.