நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சம்
ADDED :4 days ago
செஞ்சி: நல்லான் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.
செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 20 ஆம் ஆண்டு கருட சேவை உற்சவம் நடந்ததுது. அதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. 7.30 மணிக்கு திருவேங்கடமுடையான் கருட வாகனத்தில் எழுந்தருளினார். சாமி வீதி உலா நடந்தது.பெற்றது. பஜனை குழுவினர்கள் பாசுரங்களை பாடி வந்தனர். விழா ஏற்பாடுகளை வைணவ மகா சபை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சேகர், அறிவழகன், கதிரவன், பச்சையப்பன், பாண்டியன், அண்ணாதுரை, பாண்டியன் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.