உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் குருபூஜை விழா

திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் குருபூஜை விழா

திருப்போரூர்; திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தில், 367ம் ஆண்டு, குரு பூஜை விழா இன்று கோலாகலமாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டது. அவர், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, பக்தர்களுக்கு விபூதி அளித்து, பல நோய்களை தீர்த்தும், கந்தனுக்கு நித்திய பூஜைகளையும் செய்து வந்தார். கந்தனை பற்றி, 726 பாடல்களையும் பாடியுள்ளார். வைகாசி விசாகம், பவுர்ணமி நாளில், மடத்தில் ஜோதி வடிவில் மறைந்தார். இதையடுத்து, வைகாசி விசாக நாளில், சிதம்பர சுவாமிகளின் குரு பூஜை விழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு சுவாமிகளின், 367வது குரு பூஜை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சிதம்பர சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகமும், தீப துாப ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, அன்னதான படையல் நடந்தது. மாலை, சிதம்பர சுவாமிகளின் உற்சவமூர்த்தி, கந்தசுவாமி கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் மாடவீதி உலாவும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !