வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் முத்து பல்லக்கு
ADDED :6 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அம்மன் முத்து பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 5ல் கொடியேற்றத்துடன் துவங்கி பதினைந்து நாட்கள் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். மே 26ல் திருவிழா துவங்கியது. 27ல் அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார். தொடர்ந்து தீச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், வண்டி வேஷ நிகழ்வுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் முத்து பல்லக்கில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.