நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்
சிவகங்கை,; நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. கோயிலில் வைகாசி திருவிழா மே 31 அன்று மாலை 5:15 மணிக்கு அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. மே 22 காலை 9:35 மணி முதல் 10:25 மணிக்கு கொடியேற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் கண்ணுடைய நாயகி வெள்ளி கேடகத்திலும், இரவு 7:00 மணிக்கு தினமும் அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி, ரிஷபம், அன்னம், வெள்ளி குதிரை வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
விழாவின் 8ஆம் நாளான நேற்று இரவு வெள்ளி ரதம் நிகழ்ச்சி, 9ம் நாளான இன்று காலை 11:20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் தேரோடும் வீதியில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 12:25க்கு தேர் நிலையை அடைந்தது. இரவு 7:00 மணிக்கு கண்ணுடைய நாயகி புஷ்ப பல்லக்கில் திரு வீதி உலா வந்தார். பத்தாம் நாளான இன்று காலை 8:00 மணிக்கு பால்குடம், பூக்குழி இறங்குதல் நடைபெறும். இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். நாளை உற்சவ சாந்தி, வெள்ளி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.