உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  கந்தக்கோட்டத்தில் வைகாசி விசாகம் விமரிசை

 கந்தக்கோட்டத்தில் வைகாசி விசாகம் விமரிசை

பூங்கா நகர்;  வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கந்தகோட்டம் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சென்னை பூங்கா நகர், ராசப்பா செட்டி தெருவில் உள்ளது கந்தகோட்டம் கந்தசாமி கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில். மிக பழமையான இந்த கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முத்துக்குமார சுவாமிக்கு, 108 பால்குட மற்றும் இளநீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !