உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் வைகாசி விசாகம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மருதமலையில் வைகாசி விசாகம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகம் விழா வெகு சிறப்பாக நடந்தது.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இந்தாண்டு, வைகாசி விசாகம் நட்சத்திரம், மே 29ம் தேதி பகலில் துவங்கி, மே 30ம் தேதி, பகல் நிறைவடைந்தது. இதனையொட்டி, மருதமலையில், நேற்று பகல், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவமூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மூலவர் ராஜ அலங்காரத்திலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நான்கு சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !