கமுதி காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா
ADDED :134 days ago
கமுதி: கமுதி அருகே காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. கடந்த வாரம் விழாவை முன்னிட்டு காப்புகட்டுதல், முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது.மூலவரான காமாட்சி அம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.501 விளக்குபூஜை நடந்தது.கோயில் முன் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக காமாட்சியம்மன் கோயில் முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி தூக்கி சென்று கமுதி குண்டாறில் கரைத்தனர்.ஏற்பாடுகளை கவுரவ செட்டியார்கள் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.