முனியாண்டி கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா
ADDED :7 days ago
விருதுநகர்: விருதுநகர் அய்யனார் நகரில் உள்ள ஏழு கன்னிமார்கள், கருப்பசாமி, முனியாண்டி கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது.
மே 28ல் துவங்கிய திருவிழாவில் நேற்று முன்தினம் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி ஆகியவை நடந்தது. நேற்று விளையாட்டு போட்டிகள், 21 பானையில் பொங்கல் வைத்து கருப்பசாமி, முனியாண்டிக்கு பூஜையாகி திருவிழா நிறைவடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.