கொங்கன கிரி கந்தபெருமான் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
ADDED :7 days ago
அனுப்பர்பாளையம்; திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கன கிரியில் புகழ் பெற்ற அருள்மிகு ஶ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஶ்ரீ கந்தபெருமான் திருக்கோயில் உள்ளது. கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, மாலை 3:30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், 4:00 மணிக்கு மஹா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. 4:15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் தேர் நிலையில் இருந்து கிரி வல பாதையின் வழியாக கோவிலை சுற்றி மீண்டும் தேர் நிலையை அடைந்தது. இதில் நூற்று கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பவானி, அறங்காவலர் குழு தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, அறங்காவலர்கள் ராஜாமணி, துரைசாமி, ஜீவானந்தம், ஆகியோர் செய்து இருந்தனர்.