புதுச்சேரி: வெண்ணெய் தாழி கோலத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :7 days ago
புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிகள் வெண்ணெய் தாழி கோலத்தில் அருள்பாலித்தனர்.
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் 40ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 22ம் தேதி துவங்கியது.
மறுநாள் 23ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிகள் விேஷச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு வெண்ணெய் தாழித் திருகோலத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்று 31ம் தேதி காலை 6:30 மணிக்கு திருத்தேருடன் தீர்த்தவாரி நடக்கிறது.
அடுத்த மாதம் 5ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 6ம் தேதி பானக பூஜையுடன் நிறைவு பெறுகிறது.