திருத்தணி கோவில் அஞ்சல் அட்டை உற்சவர் முருகன் முத்திரை வெளியீடு
ADDED :6 days ago
திருத்தணி: அஞ்சல் துறை சார்பில், திருத்தணி முருகன் கோவில் படம் கொண்ட அஞ்சல் அட்டை, முருகன் உருவம் பதித்த அஞ்சல் முத்திரை ஆகியவை, நேற்று திருத்தணியில் வெளியிடப்பட்டன.
தி ருத்தணி – அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம், காஞ்சிபுரம் கோட்டத்தின் சார்பில், திருத்தணி முருகன் கோவில் முருகன் உருவம் பதித்த அஞ்சல் முத்திரை மற்றும் திருத்தணி முருகன் கோவில் படம் கொண்ட அஞ்சல் அட்டை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது.
சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மனோஜ் வெளியிட, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
முடிவில், காஞ்சிபுரம் கோட்ட கூடுதல் தலைமை அஞ்சலக அதிகாரி முரளிதரன் நன்றி கூறினார்.